கரூரில் 296 பயனாளிகளுக்கு 6.48 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டம் வழங்கினார் செந்தில் பாலாஜி.
கரூரில் 296 பயனாளிகளுக்கு 6.48 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டம் வழங்கினார் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் , சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ , சிவகாமசுந்தரி , மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் , ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ் செல்வன் , வேளாண்மை இணை இயக்குனர் சிவானந்தம் , கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன்,துணை மேயர் தாரணி சரவணன் , அரசு துறை அதிகாரிகள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுடைய ஆடுகளை நாய்கள் கடித்து இறந்ததன் விளைவாக தமிழ்நாடு அரசின் சார்பாக இழப்பீட்டுத் தொகையும் , மகளிர் திட்டம் சார்பாக வட்டார வணிக வள மையம் மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாகவும் மொத்தம் 296 பயனாளிகளுக்கு ரூபாய் 6.48 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story






