அருப்புக்கோட்டை நகராட்சியில் 297 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு*

அருப்புக்கோட்டை நகராட்சியில் 297 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு*
X
அருப்புக்கோட்டை நகராட்சியில் 297 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு*
அருப்புக்கோட்டை நகராட்சியில் 297 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்ற இடத்தில் சாலை வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முதற்கட்டமாக புறநகர் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு அரசு 297.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக புறநகர் பகுதிகளான கணேஷ் நகர், அன்பு நகர், நெசவாளர் காலனியில் உள்ள தெருக்களில் மேன்ஹோல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது தவிர நகரின் ஒரு சில பகுதிகளில் கழிவுநீர் வெளியேற்றும் சம்ப் தொட்டிகள் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் அருப்புக்கோட்டை நகராட்சியில் தேவா டெக்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்தும், ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் குறித்தும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது பாதாள சாக்கடை திட்ட பணிகளை மழைக்காலம் தூங்குவதற்கு முன்பு விரைந்து முடிக்கவும், பணிகள் முடிவு பெற்ற பிறகு உடனடியாக போர்கால அடிப்படையில் பாதாள சாக்கடைகள் தோண்டப்பட்ட பகுதிகளில் சாலை வசதிகளை விரைந்து அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் அமைச்சர் உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story