இலங்கைக்கு கடத்த முயன்ற 2975 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

X
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட மணப்பாடு வடக்கே கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கண்டெய்னர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 35 கிலோ எடை கொண்ட 85 மூடைகளில் 2975 கிலோ பீடி இலை பண்டல்கள் உதவி ஆய்வாளர் ரவிசங்கர் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதி்ப்பு ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும், போலீசாரை கண்டதும் லாரியில் வந்தவர்கள் தப்பியோடி விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

