கோவை: ஓய்வு பெற்ற பொறியாளரிடம் 29.8 லட்சம் மோசடி !

X
அரசு தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நபர் ஒருவரிடம் டிஜிட்டல் கைது என கூறி ரூ.29.8 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற பொறியாளருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் வங்கிக் கணக்கில் தவறான பரிவர்த்தனை நடந்துள்ளது, டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என மிரட்டினர். இதனை நம்பிய அவர், அவர்கள் கூறியபடி ரூ.29.88 லட்சம் தொகையை மற்றொரு வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். பின்னர் பணம் திரும்ப வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்கில் விசாரணை நடத்திய போலீசார், கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த நபீல், ஹரிஷ் (குட்டாஸ்), முகமத் ராமீஸ் ஆகிய மூவரும் இதில் தொடர்புடையவர்கள் என கண்டறிந்து கைது செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் நேற்று அடைத்துள்ளனர்.
Next Story

