கார்த்திகை தீப திருவிழாவின் 3- ம் நாள் விழா

கார்த்திகை தீப திருவிழாவின் 3- ம் நாள் விழா

திருவீதி உலா 

திருவண்ணாமலை பஞ்சபூததலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்குவது தி.மலையாகும். இங்கு உள்ள புகழ் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 17- ஆம் தேதி காலையில் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள 64 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று காலையில் அண்ணாமலையார் கோயிலில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு கோயிலின் உள்ளே ராஜகோபுரம் முன்பாக எழுந்தருளினர். அங்கு விநாயகர்மற்றும் சந்திரசேகருக்கு தீபாரதனைகள் நடைபெற்றது. பின்னர் விநாயகர்வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் 5 குடைகளுடன் கூடிய பூத வாகனத்திலும் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story