சேலத்தில் பெயிண்டரை மிரட்டி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது
Salem (west) King 24x7 |16 Aug 2024 9:30 AM GMT
போலீசார் நடவடிக்கை
சேலம் கன்னங்குறிச்சி புதுஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அய்யாவு மகன் மணிவண்ணன் (வயது 35). பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் அழகாபுரத்தில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றார். அங்குள்ள பெரியம்மன் கோவில் பகுதியில் சென்றபோது, 3 பேர் மணிவண்ணனை வழிமறித்தனர். அவர்கள் அவரை மிரட்டி சட்டை பையில் வைத்திருந்த ரூ.1,200-ஐ பறித்துக்கொண்டு தப்பிஓடிவிட்டனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசில் மணிவண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பணம் பறித்தது, பிரபல ரவுடிகளான அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த அஜித்குமார் (29), பாபு (24), மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story