திருத்தணி முருகன் கோயிலில் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் பக்தர்கள் அவதி

திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய படை எடுத்த பக்தர்கள் மூன்று மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பு திருக்கோயில் நிர்வாகம் போதிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று முருக பக்தர்கள் குற்றச்சாட்டு
திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய படை எடுத்த பக்தர்கள் மூன்று மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பு திருக்கோயில் நிர்வாகம் போதிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று முருக பக்தர்கள் குற்றச்சாட்டு திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயிலில் இன்று அதிகளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை கோவிலில் குவிந்தனர் இதனால் பொது வழி தரிசனம் கட்டண வழி தரிசனத்தில் மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர் ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு இன்று குவிந்துள்ளதால் மேலும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை போன்ற தினங்கள் என்பதால் அதிகளவு பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு குவிந்து வருகின்றன சொந்த வாகனங்களில் வருவதால் மலைப்பகுதியில் மூன்று மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளை மீறி செல்வதால் மலைப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போலீசார் கடும் அவதி அடைந்தனர் அடைந்து வருகின்றனர் மேலும் ஆட்டோக்களுக்கு மலைக்கோயில் செல்வதற்கு கட்டண இல்லாமல் திருக்கோயில் இலவசமாக அனுமதிப்பதால் அதிகளவு ஆட்டோக்கள் மலைக்கோவிலில் அதிகளவு பொதுமக்களை ஏற்றுக் கொண்டு போக்குவரத்து விதிகளை மீறி வருவதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் இவர்களால் ஏற்படுவதாக வாகன ஓட்டுகள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேலாக மலைக்கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சாமானிய பக்தர்கள் மலைக்கோயில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக முருக பக்தர்கள் குற்றச்சாட்டு போதிய முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்யவில்லை பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story