ரேஷன் அரிசி விற்ற 3 பேர் கைது

ரேஷன் அரிசி விற்ற 3 பேர் கைது
கைது
சின்னசேலம் அடுத்த பங்காரம் ரேஷன் கடையில் இருந்து ஆட்டோவில் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், பொதுவிநியோக திட்ட மாவட்ட துணை பதிவாளர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் பங்காரம் ரேஷன் கடையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அதில் கடையின் விற்பனையாளர் சத்தியமூர்த்தி,54; அரிசி மூட்டைகளை தனி நபருக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, விற்பனையாளர் சத்தியமூர்த்தியை 'சஸ்பெண்ட்' செய்து கூட்டுறவு சார்பதிவாளர் கமலக்கண்ணன் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ேஹமலதா தலைமையிலான போலீசார், ரேஷன்கடை விற்பனையாளர் உலகங்காத்தானை சேர்ந்த ஆறுமுகம் மகன் சத்தியமூர்த்தி,54; அரிசி வாங்கிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த நாவன் மகன் சடையன்,55; ஆட்டோ உரிமையாளர் நீலமங்களத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் பச்சையப்பன்,40; ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிஎண்15 எம்1766 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோ, 300 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story