அரிமா சங்கம் சார்பாக பள்ளிக்கு 3 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள்
அரிமா சங்கம் சார்பாக பள்ளிக்கு 3 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள்
வாலாஜாபாத் டி.எஸ்.எஸ்.என் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் வாலாஜாபாத் பாலாறு அரிமா சங்கம் சார்பில் சுமார் மூன்று லட்சம் மதிப்பில் இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள டி.எஸ்.எஸ்.என் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் பன்னாட்டு லயன் சங்கத்துடன் இணைந்து வாலாஜாபாத் பாலாறு அரிமா சங்கம் சார்பில், சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாபாத் பாலாறு அரிமா சங்க தலைவர் ஹரிகுமார் தலைமையிலும், மண்டல தலைவர் வேலாயுதம் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பன்னாட்டு லயன் சங்க மாவட்ட ஆளுநர் லயன் எஸ். சுரேஷ் கலந்து கொண்டு, பள்ளிக்கு 1, லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மூன்று இலவச கழிப்பறை திறந்து வைத்து, பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள், ஒலிபெருக்கி மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பொது மக்களுக்கு, இலவச அரிசி, மளிகை பொருட்கள், தையல் இயந்திரம், சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை, கல்வி ஊக்கத்தொகை, இலவச கண் சிகிச்சை முகாம், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 250 மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில், வாலாஜாபாத் பாலாறு அரிமா சங்க செயலர், பாலசுப்பிரமணியம், சங்க பொருளாளர் விஜயகுமார் மற்றும் வாலாஜாபாத் பாலாறு அரிமா சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பன்னாட்டு லயன் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.