வங்கதேசத்தில் உறவினரை கொலை செய்து திருப்பூரில் பதுங்கியிருந்த இளைஞர் அவரது மனைவியின் நண்பர் என 3 பேர் கைது!
Tiruppur (North) King 24x7 |26 Sep 2024 9:12 AM GMT
வங்கதேசத்தில் உறவினரை கொலை செய்து திருப்பூரில் பதுங்கியிருந்த இளைஞர் அவரது மனைவியின் நண்பர் என மூன்று பேர் கைது. திருப்பூரில் ரூ. 6,000 பெற்று ஆதார் எடுக்க உதவிய மனு எழுத்தாளரும் கைது!
வங்கதேசத்தில் உறவினரை கொலை செய்து திருப்பூரில் பதுங்கி இருந்த இளைஞர் அவரது மனைவி நண்பர் என மூன்று பேர் கைது திருப்பூரில் 6000 ரூபாய் பெற்று ஆதார் எடுக்க உதவிய மனு எழுத்தாளரும் கைது. திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த வங்கதேச இளைஞர்கள் ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் திருப்பூர் மாநகரில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வங்கதேச இளைஞர்கள் பதுங்கி உள்ளனரா என கண்டறிய திருப்பூர் மாநகர காவல் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய போலீசார் வெங்கமேடு பகுதியில் சோதனை மேற்கொண்ட பொழுது தன்வீர் அகமது(29) என்பவர் முன்னுக்குப் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர் திருப்பூர் முகவரியில் ஆதார் அட்டை வைத்திருந்ததால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் விசாரித்ததில் அவரும் அவரது மனைவி சோஹாசிம் (22) வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் வங்கதேசத்தில் அத்தை கணவருடன் ஏற்பட்ட தகராறில் மாமாவை 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து விட்டு இந்தியாவிற்குள் ஊடுருவி கோபிச்செட்டிப்பாளையம் வந்து தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நண்பர் வீரபாண்டி பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த மம்முல் 28 என்பவர் உதவியுடன் திருப்பூர் வந்து வெங்கமேடு பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் இவர்களுக்கு திருப்பூர் முகவரியில் ஆதார் கார்டு எடுக்க 6 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு உதவிய மாநகராட்சி முன்புறம் அமர்ந்து மனு எழுதிக் கொடுக்கும் (இடைத்தரகர்) மாரிமுத்து (42) என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கதேசத்தில் கொலை குற்றம் செய்து உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தலைமறைவாக வாழ்ந்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டதும் அவர்களுக்கு 6000 ரூபாய் பெற்றுக் கொண்டு ஆதார் கார்டு எடுக்க உதவிய மனு எழுத்தர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story