மதுரையில் உள்ள மத்திய அரசின் பள்ளி உள்ளிட்ட 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
Sholavandan King 24x7 |30 Sep 2024 1:31 PM GMT
வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதிலும் சோதனை
மதுரையில் உள்ள மத்திய அரசின் பள்ளி உள்ளிட்ட 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டனர். வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் எந்த வெடிகுண்டு பொருட்களும் சிக்கவில்லை என காவல்துறை தகவல் தெரிவித்து, பெற்றோர்கள் பதட்டம் அடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர். மதுரை நரிமேடு பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திர வித்யாலயா மற்றும் மதுரை பொன்மேனி ஜீவனா ஸ்கூல் உள்ளிட்ட 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இமெயில் மூலமாக காவல்துறையினருக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது.பள்ளி நிர்வாகத்திற்கு எந்த மிரட்டலும் வராத நிலையில் காவல்துறையினருக்கு இமெயில் மூலமாக அனுப்பப்பட்ட நிலையில் மிரட்டல் வந்த 3 பள்ளிகளிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதிலும் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் எந்த பள்ளிகளும் எந்த வெடிகுண்டு பொருட்களும் சிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 3 பள்ளிகளிலும் காவல்துறையினர் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்திய தகவல் அறிந்த ஏராளமான பெற்றோர்கள் பள்ளிமுன்பாக வருகை தரத் தொடங்கினர். இதனையடுத்தாக பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறை சார்பிலும் பெற்றோர்கள் பதட்டம் அடைய வேண்டாம் என பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர். இது போன்ற போலியான மிரட்டல் இமெயில் மூலமாக அனுப்பிய நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story