பெண் தற்கொலை விவகாரம் 3 பேர் மீது வழக்கு 

பெண் தற்கொலை விவகாரம் 3 பேர் மீது வழக்கு 
நாகர்கோவில்
குமரி மாவட்டம் நாகர்கோவில் ரஹமத் கார்டன் 3-ம் தெருவை  சேர்ந்தவர் ஆஷா புஷ்ரா (37). திருமணமாகாத  இவர் சம்பவ தினம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் குமரி அரசு மருத்துவ கல்லுரி ஆஸ்பத்திரியில் சேர்த்தும், அங்கு சிகிட்சை  பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து நேசமணிநகர் போலீசில் அவர் உறவினர் அபுல்பயாத் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினார்கள்.        அப்போது ஆஷா புஷ்ரா எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது நிறுவன த்தை உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுத்தபோது சம்பந்தப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை எனவும், எனவே என்னுடைய சாவருக்கு தனியார் நிறுவன உரிமையாளர்,  அவரது நண்பர் மற்றும் போலீசார் காரணம் என்று கடிதம் எழுதினார்.        இதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆஷா புஷ்ரா கடிதத்தில் கூறிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி,  உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள்.  இதையடுத்து அவரது உடல் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில்  வைக்கப்பட்டது.        இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் போலீஸ் சார் ஆஷா புஷ்ராவை தற்கொலை தூண்டியதாக கேஸ் ஏஜென்சி உரிமையாளர் நவநீத் அவரது தந்தை சசிதரன் மற்றும் நண்பர் பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இருப்பினும் ஆஷா புஷ்ராவின் உடல் இதுவரை ஆஸ்பத்திரியிலே உள்ளது.
Next Story