தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விநியோகம் செய்து வந்த 3 பேர் கைது.
Arani King 24x7 |4 Oct 2024 3:32 AM GMT
கண்ணமங்கலம் பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட லாட்டரிகள் பறிமுதல். .
ஆரணி தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடைத்தரகர்கள் விநியோகம் செய்து வந்ததாக ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தில் 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்து லாட்டரி சீட்டுகளை தரம் பிரித்து திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக எஸ்.பிக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தி.மலை மாவட்ட குற்றப்பிரிவு ஏ.எஸ்.பி சதீஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணை செய்ததில் கண்ணமங்கலம் பகுதியில் நகை கடை வைத்துக்கொண்டு நகை வியாபாரி போல் கள்ளத்தனமாக லாட்டரிகளை விற்பனை செய்து வந்த அண்ணாதுரை என்பவரும், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கட்டு கட்டாக பல லட்சம் மதிப்புள்ள கள்ள லாட்டரிகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story