ஆண்டிபட்டியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள் 3 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் .
Andippatti King 24x7 |24 Oct 2024 4:03 PM GMT
ரேஷன் கடைகளில் காலி இடங்களை நிரப்புவதற்கு அரசு முன்வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே பணியமர்த்தப்பட்ட சேல்ஸ்மேன்களை அருகாமையில் உள்ள கடைகளில் நிரப்பிய பின்பு, புதிய ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் ,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
தேனியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள் 3 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் . ஆண்டிபட்டி, அக்.23 தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது .ஏற்கனவே இந்த அமைப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசுக்கு தங்கள் கோரிக்கை வலியுறுத்தும் வகையில், ஆலோசனைக் கூட்டம், ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசுக்கு மூன்று முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களான டீ தூள் ,மல்லித்தூள் உள்ளிட்ட சில தரம் இல்லாத பொருட்களை அனுப்பி வருகிறார்கள். காலாவதியான பொருட்களும் சில நேரம் வந்து சேர்கிறது .இதனால் பாதிக்கப்படுவது அந்த ரேஷன் கடையில் உள்ள சேல்ஸ்மேன்கள் மட்டும் தான். எனவே தரமான பொருள்கள் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும், காலாவதியான பொருட்களை நிறுவனமே மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், கடைகளில் பல்வேறு சூழ்நிலையில் ஆய்வுக்கு வரும்போது முன்பு பற்றாக்குறை ஏற்பட்டால் அரிசி கிலோ 1 க்கு 25 ரூபாய் அபதாரமும் ,துவரம் பருப்புக்கு 75 ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டு வந்தது, தற்போது அதனை அரிசிக்கு 45 ரூபாயாக அதிகரித்தும், துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு 110 ரூபாய் என்று அதிகரித்தும் அபதாரம் விதித்து வருகிறார்கள். எனவே இதனால் ரேஷன் கடைக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஏற்கனவே உள்ள நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், தற்போது ரேஷன் கடைகளில் காலி இடங்களை நிரப்புவதற்கு அரசு முன்வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே பணியமர்த்தப்பட்ட சேல்ஸ்மேன்களை அருகாமையில் உள்ள கடைகளில் நிரப்பிய பின்பு, புதிய ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் ,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுவதாகவும், அரசின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்லவே இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் இந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை தலைவர்கள் காளிப்பாண்டியன், செல்லாண்டி மற்றும் இணைச் செயலாளர்கள் சரவணன், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
Next Story