சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடுப்பட்டி பாலம் வாய்க்கால் கரையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட தினேஷ் (50), கிஷோர் (28), ராமு (25) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மூன்று சீட்டு கட்டுகள், ரூ.650 பறிமுதல் செய்தனர்.
Next Story