சங்கரன்கோவில் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரமாக உயர்வு

சங்கரன்கோவில் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரமாக உயர்வு
மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரமாக உயர்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நாளை முகூர்த்த தினம் முன்னிட்டு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இன்று மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையானது. கிராமங்களில் தெரு தெருவாக விற்பனை செய்யும் பூ வியாபாரிகள் 100 பூவின் விலை ரூ.60 என்ற அளவுக்கு விற்பனை செய்தனர். பிச்சி பூக்களை பொறுத்தவரை சாலையோர கடைகளில் 100 பூவானது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது. இதுதவிர கேந்தி, சேவல் கொண்டை, சம்பங்கி, ரோஜாப்பூ உள்ளிட்டவையும் விலை உயர்ந்து காணப்பட்டது. சங்கரன்கோவில் மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story