மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-வது நாளாக பணியை புறக்கணித்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-வது நாளாக பணியை புறக்கணித்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-வது நாளாக பணியை புறக்கணித்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர். கரூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது கட்டமாக பணியை புறக்கணித்து காத்திருக்கும் போராட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை, சின்ன தாராபுரம் ,கரூர், வேலாயுதம்பாளையம், மாயனூர், வாங்கல் பகுதிகளில் உள்ள தாலுக்கா அலுவலகங்களிலும் துணை ஆட்சியர் அலுவலகத்திலும், வருவாய்த்துறையினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை மாவட்ட தலைவரும், வட்டாட்சியருமான மோகன்ராஜ் தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மாவட்ட பொருளாளர், வட்டார கிளை 2 பொறுப்பாளர் கிருஷ்ணவேணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன். ஜெயராம் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதில் ஐந்து சதவீதம் குறைப்பு என்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story