களம்பூர் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது.
Arani King 24x7 |30 Nov 2024 1:21 AM GMT
ஆரணி, நவ 30 ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்த மூன்று பேரை களம்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்த மூன்று பேரை களம்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆரணி அடுத்த களம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்திக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி எஸ்.ஐக்கள் ஷாபுதீன் , குபேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணிமேற்கொள்ளும் போது கஸ்தம்பாடி கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் அன்பழகன் மகன் கோபி(38) என்பவரது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லீப் போன்றவை பறிமுதல் செய்தனர் , இதன் எடை சுமார் ஒன்றரை கிலோ எடையாகும். இதே போல கூடலூர் கிராமத்தில் சேகர்( 63) என்பவருடைய பெட்டி கடையிலும் சுமார் 11 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் களம்பூர் பகுதியில் தயாளன் மகன் திலீப்குமார்(25) என்பவரின் பெட்டி கடையில் சுமார் 3 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பதிவு செய்தனர் . மூன்று பேர் மீதும் களம்பூர் எஸ்.ஐ ஷாபுதீன் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story