திருப்பத்தூர் அருகே மூதாட்டியிடம் 3 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை!

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் முத்துமாரியம்மன் தெருவில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த மூதாட்டியின் காதிலிருந்து முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் 3 சவரன் கம்மலை கொள்ளை அடித்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் முத்துமாரியம்மன் தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மனைவி சரஸ்வதி ( 85) இவர்களுக்கு மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஆண் பிள்ளைகள் மூன்று பேரும் தனித்தனியாக அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மூதாட்டி சரஸ்வதி தன்னுடைய கணவர் சின்னசாமி இறந்த நிலையில் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த மர்ம நபர் ஒருவர் நேற்று இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் முகமூடி அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் வீட்டின் உள்ளே சென்று மூதாட்டி காதில் அணிந்திருந்த 3 சவரன் கம்மலை கொள்ளை அடித்து சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் கிராமிய போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து முகமூடி அணிந்து வந்த மூதாட்டியின் காதில் இருந்து கம்மலை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த மூதாட்டியின் காதிலிருந்து 3 சவரன் கம்மலை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

