மதுரை மண்டலம் 3ல் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மண்டலம் 3ல் குறைதீர்க்கும் கூட்டம்
மதுரையில் நாளை மறுநாள் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (டிச.24) பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. மதுரை மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மண்ட லம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (டிச.24) பொதுமக்கள் குறைதீர் முகாம் மேயர் இந்திராணி தலைமை யில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, மாமன்ற உறுப்பினர் கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இம்முகாமில் இந்த மண்டலத்தை சேர்ந்த பொதுமக்கள் மேயரிடம் தங்களது குறைகளை மகனுக்காக அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story