ஆரணி -சேத்துப்பட்டு சாலையில் ஏரிக்கால்வாயில் கார் கவிழ்ந்து 3 பேர் காயம். பசுமாடு பலி.

ஆரணி -சேத்துப்பட்டு சாலையில் ஏரிக்கால்வாயில் கார் கவிழ்ந்து 3 பேர் காயம். பசுமாடு பலி.
X
ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள துந்தரிகம்பட்டு பகுதியில் கார் நிலை தடுமாறி ஏரிக்கால்வாயில் கவிழ்ந்தது.
ஆரணி சேத்துப்பட்டு சாலையில் உள்ள துந்தரிகம்பட்டு பகுதியில் கார் நிலை தடுமாறி பசு மாடு மீது மோதி ஏரிக்கால்வாயில் கவிழ்ந்து 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் பசுமாடு பலியானது. கடலூர் பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ்(28) என்பவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பிரித்திவிராஜ், இவரது தந்தை கந்தன், தாயார் தனலட்சுமி ஆகிய 3 பேரும் கடலூரில் காரில் வேலூருக்கு சொந்த வேலையாக புறப்பட்டு சென்றனர். ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள துந்தரிகம்பட்டு என்ற பகுதியில் கார் நிலைதடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த பசு மாடு மீது மோதி ஏரி கால்வாயில் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த மூன்று பேரும் காயம் அடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பசுமாடு அதே இடத்தில் பலியானது. இந்த பசுமாடு துந்தரிகம்பட்டு சேர்ந்த ஜோதிசீனிவாசன் என்பவருக்கு சொந்தமான மாடு என்று தெரியவந்தது. மேலும் தொடர்ந்து ஆரணி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story