சேலத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் சிக்கினர்
Salem King 24x7 |25 Dec 2024 1:52 AM GMT
போலீசார் நடவடிக்கை
சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோரி மேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் ரோந்து சென்றனா். அப்போது லாட்டரி விற்பனை செய்து கொண்டு இருந்த கன்னங்குறிச்சி சின்ன மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சிவதாபுரம் நெய்க்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (வயது 29), சிவதாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (44) ஆகிய 2 பேரையும் கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 10 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story