நாலுமாவடியில் 3ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து!
Thoothukudi King 24x7 |26 Dec 2024 5:07 AM GMT
நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சியை சகோ. மோகன் சி. லாசரஸ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடார வளாகத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்குவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து ஜெபித்து கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story