போதைப் பொருள் விற்ற 3 பேர் கைது !
Coimbatore King 24x7 |27 Dec 2024 2:59 AM GMT
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்ற சோதனையில் போதைப் பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நரசிம்மநாயக்கன்பாளையம், குமரபுரம், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ராக்கிபாளையம் அடுத்த டைமன் நகரில் 3 பேர் போதைப் பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்த போலீசார், அவர்கள் கோவை காந்திமாநகரை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 23), அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயகிருஷ்ணா (வயது 21), டைமன் நகரைச் சேர்ந்த செல்வம் (வயது 21) என்பதைக் கண்டுபிடித்தனர்.இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2000 ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்து அவர்களை, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
Next Story