காப்புக்காடு வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் சிக்கினர்
Salem King 24x7 |3 Jan 2025 4:02 AM GMT
ரூ.2¾ லட்சம் அபராதம் விதிப்பு
சேலம் பன்னிகரடு காப்புக்காடு வனப்பகுதியில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதாக சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தேக்கம்பட்டி பிரிவு வனவர் பழனிவேல், வனகாப்பாளர்கள் விஜய், விஜயபாரதி, லோகேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக ஆயுதங்களுடன் வனபகுதிக்குள் நுழைந்த 3 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கொல்லப்பட்டி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் (வயது 50), வட்டக்காடு பகுதியை சேர்ந்த தமிழ்மணி (37), குப்புசாமி (62) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற அவர்களுக்கு மொத்தமாக ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி உத்தரவிட்டார்.
Next Story