மாயனூர் கதவணையில் 3- லட்சம் மீன் குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாயனூர் கதவணையில் 3- லட்சம் மீன் குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாயனூர் கதவணையில் 3- லட்சம் மீன் குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு திட்டத்தின் கீழ் 202425 ஆம் ஆண்டுக்கு ஆறுகளில் நன்னீர் மீன் குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ்,கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஆறுகளில் தண்ணீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார். திட்டத்தின் படி நாட்டின மீன் வகைகளான சேல் கொண்டை, கல்பாசு, மற்றும் இந்திய பெருங்கண்டை மீன் ரகங்களான கட்டலா, ரோகு,மிர்கால் ஆகியவற்றின் சினை மீன்கள் ஆறுகளில் இருந்து சேகரிக்கப்பட்டு, சேலம் மாவட்டம், மேட்டூர் அணை அரசு மீன் குஞ்சு உற்பத்தி பண்ணையில் தூண்டுதல் முறையில் நுண்மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன்குஞ்சுகளை கிருஷ்ணகிரி மீன் பண்ணையில் பெருவிரலிகளாக வளர்க்கப்பட்டு, மொத்தம் 3- லட்சம் மீன் குஞ்சு பெருவிரலிகள் கரூர் மாவட்டம், காவிரி ஆற்றில், மாயனூர் கதவணை பகுதியில் நல்ல நிலையில் இன்று இருப்பு செய்யப்பட்டது. ஆறுகளில் உள்நாட்டு மீன் வளத்தினை பெருக்கிடவும், அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடவும், ஆறுகளின் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை நிலை நிறுத்திடவும், ஆற்று மீன் பிடிப்பினை நம்பி உள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இந்நிகழ்ச்சியில் திருச்சி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் குமரேசன், மற்றும் மீனவ துறை அதிகாரிகள், கிராமப் பிரதிநிதிகள், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story