குமரி : கண்ணாடி கூண்டு பாலத்திற்கு செல்ல 3 நாள் தடை
Nagercoil King 24x7 |11 Jan 2025 12:19 PM GMT
கன்னியாகுமரி
கன்னியாகுமரி கடல் நடுவே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை பாதலத்தை கடந்த 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பாலம் திறக்கப்பட்ட பின் 3 நாட்களாக சூறை காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள் படகில் கண்ணாடி பாலத்தை சென்று பார்க்க முடியாமல் சிரமம் அடைந்தனர். கடந்த சில நாட்களாக விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்று அங்கிருந்து கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்றவாறு திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்த்த மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் கண்ணாடி இழை பாலத்தில் இன்று 11-ம்.தேதி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் முதல் கட்டமாக 3 நாட்களுக்கு கண்ணாடி இழை பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடியாவிட்டால் மேலும் சில நாட்கள் தடை தொடர வாய்ப்புள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். தற்போது பொங்கல் தொடர் விடுமுறை வருவதால் தடை நீடித்தால் சுற்றுலா பயணிகள் கண்ணாடி இழை பாலத்தில் செல்ல முடியாமல், விவேகானந்தர் நினைவு பாறைக்கு மட்டுமே சென்று வரமுடியும். சுற்றுலா பணிகள் மறு உத்தரவு வந்த பின்னரே கண்ணாடி இழை பால்தில் செல்ல அனுமதிக்கப்படுவர். கண்ணாடி இழை பாலம் திறந்து சில நாட்களிலே சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பண்டிகை கால சீஸன் நேரத்தில் கன்னியாகுமரி வருவோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
Next Story