பொங்கல் பண்டிகையையொட்டி குண்டுமல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
Salem King 24x7 |14 Jan 2025 2:07 AM GMT
பொதுமக்கள் அதிர்ச்சி
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் கடைவீதி அருகே உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று மேலும் ரூ.600 உயர்ந்து குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இதேபோல் முல்லை பூவும் கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையாது. பூக்கள் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஜாதி மல்லி கிலோ ரூ.1,200-க்கும், காக்கட்டான், கலர் காக்கட்டான் கிலோரூ.1,100-க்கும், மலைக்காக்கட்டான் ரூ.900-க்கும், ஏற்காடு மலைக்காக்கட்டான் ரூ.700-க்கும், அரளி ரூ.340-க்கும், மஞ்சள் அரளி, செவ்வரளி தலா ரூ.450-க்கும், ஐ.செவ்வரளி 360-க்கும், நந்தியாவட்டம் ரூ.220-க்கும், சி.நந்தியாவட்டம் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Next Story