பாலமேடு ஜல்லிக்கட்டில் 3 வது சுற்று நிலவரம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு அனல் பறக்கும் விதமாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.15) தற்போது விறுவிறுப்பாக வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. தற்போது முடிந்த மூன்றாவது சுற்று நிலவரப்படி நூறு காளைகள் அவிழ்த்து விடப்பட்டதில் 22 மாடுகள் பிடிபட்டன. இந்த சுற்றில் தகுதியான வீரர்கள் என 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கமல் ராஜ் பாலமேடு பிடித்த காளைகள் 6, சக்தி மணி ராஜாக்கள்பட்டி பிடித்த மாடுகள் 2, பிரகாஷ் மேட்டுப்பட்டி பிடித்த மாடுகள் 2, இவர்கள் மூவரும் இறுதி சுற்றுக்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
Next Story