சிறுமிக்கு பாலியல் தொல்லை கொத்தனாருக்கு 3 ஆண்டுகள் சிறை

X
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சின்ன உஞ்சனையைச் சேர்ந்த கொத்தனார் அசோக்குமார் (32). இவர் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார். இதுகுறித்து புகாரின் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து அசோக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அசோக்குமாருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.
Next Story

