காதலர் தினத்துக்கு சலுகை அறிவித்த பேக்கரிக்கு தாலி கயிற்றுடன் சென்ற இந்து முன்னணியினர் 3பேர் கைது

X
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள தனியார் பேக்கரியில் காதலர் தினத்தையொட்டி காதல் ஜோடிகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. மேலும், அங்கு வரும் காதலர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்க பேக்கரி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னிபாலா தலைமையிலான அந்த அமைப்பினர், பேக்கரிக்கு வந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க தாலி கயிற்றுடன் சென்றனர். இதையடுத்து, அங்கு சென்ற காரைக்குடி வடக்கு போலீசார், இந்து முன்னணியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
Next Story

