குமரி மாவட்டத்திற்கு 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை

குமரி மாவட்டத்திற்கு 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை
X
கலெக்டர் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-      மகா சிவராத்திரி விழா வருகிற 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோன்று அடுத்த மார்ச் மாதம் 4 தேதி அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா மற்றும் 11ஆம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நடைபெறுகிறது. இதை ஒட்டி வருகிற 26 ஆம் தேதியும் அடுத்த மாதம் 4 தேதி மற்றும் 11ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.      26 ஆம் தேதி அளிக்கப்பட்டுள்ள மகா சிவராத்திரி விழா  உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் 8ஆம் தேதி சனிக்கிழமை அன்றும்,  ஐயா வைகுண்டசாமி அவதார தின விழாவுக்காக அடுத்த மாதம் 4 தேதி அளிக்கப்பட்டுள்ள விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் 24 ஆம் தேதி சனிக்கிழமை அன்றும்,  மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவுக்காக அடுத்த மாதம் 11ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக ஏப்ரல் மாதம் 12-ம் தேதி சனிக்கிழமை அன்று குமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.       மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாட்களில் குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும். என அறிக்கையில் கூறி உள்ளார்.
Next Story