வீரன் கோவில் முதல் கடற்கரை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு

புதிய சாலை அமைக்க கப்பி கற்கள் பரப்பி 6 மாதங்கள் ஆகியும் சாலை அமைக்காததால் பொதுமக்கள் வேதனை
நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி வீரன்கோவில் முதல் கடற்கரை வரை 3 கிலோ மீட்டர் செல்லும் சாலையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதை அடுத்து, முதல்வரின் கிராம சாலை திட்டம் மூலம் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்க சாலையில், கப்பி கற்கள் பரப்பி ஆறு மாதங்கள் ஆகியும், இதுவரை சாலை சீரமைக்கப்படாததால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நடக்கக் கூட முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், வாகனங்கள் அடிக்கடி பழுதாகி வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக, சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால், கிராம மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவது என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story