கஞ்சா விற்ற 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா விற்ற 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராமன் (வயது 29). அதே பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (20), கார்த்திக் (26). இவர்கள் 3 பேரும் கஞ்சா விற்றதாக கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் தொடர்ந்து குற்ற செயல் புரிந்ததாக கூறப்படுகிறது. எனவே 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்நதது. அதற்கான நகலை ஜெயிலில் உள்ள 3 பேரிடமும் போலீசார் ஒப்படைத்தனர்.
Next Story