காசிவிசுவநாதா் கோயில் உண்டியல்கள் திறப்பு, ரூ.3 லட்சம் காணிக்கை கிடைத்தது

X
கும்பகோணம் காசிவிசுவநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகம் குளம் அருகேயுள்ள இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த வசதியாக 6 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பிட்ட நாள்கள் இடைவெளியில் எண்ணப்படும். அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை கும்பகோணம் சரக ஆய்வாளா் வெங்கடசுப்பிரமணியன் முன்னிலையில் செயல் அலுவலா் சுந்தரராஜன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பாரி, பூபதி, கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். முடிவில் ரூ. 3 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக உண்டியல்களில் செலுத்தியிருந்தது தெரியவந்தது.
Next Story

