கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டம்

X
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்தவர் சத்யா (வயது 35). இவர் நேற்று தனது 3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பின்னர் அவர் திடீரென்று குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, நான் குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன். விசைத்தறிக்கூடத்தில் நான் கூலி வேலைக்கு சேர்ந்தேன். அங்கு சிலர் எனக்கு பாலியல் தொல்லை தர முயன்றதால் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டேன். இதனால் வாழ்வாதாரம் இன்றி நான் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே வாழ்வாதாரம் வேண்டி தர்ணா போராட்டம் நடத்தினேன் என்றார்.
Next Story

