திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது

திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
X
பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் மைப்பாறை பகுதியில் இயங்கி வரும் ஆகாஷ் பட்டாசு ஆலை. நாக்பூர் ரக உரிமம் கொண்ட பட்டாசு சாலை கடந்த ஆண்டு வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதங்கள் எதுவும் இல்லாத காரணத்தில் அங்குள்ள ஏராளமான பொருட்கள் தீக்கிரையாகின. இந்த விபத்தை தொடர்ந்து அதிகாரிகள் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்ததாக கூறப்படும் நிலையில் மீண்டும் அந்த பட்டாசு ஆலை உரிமத்தை புதுப்பிக்காமல் சல்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களோடு சட்ட விரோதமாக பணியாளர்களை கொண்டு இயங்கி வருவதாக திருவேங்கடம் வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பெயரில் வட்டாட்சியர் கண்ணன் மற்றும் திருவேங்கடம் காவல்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்து பொருட்களை பறிமுதல் செய்து பின்னர் பட்டாசு ஆலை உரிமையாளர்களான ராதாகிருஷ்ணன், கோகுல்நாத், அதிரூபன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் உரிமத்தை புதுப்பிக்காமலும் உரிமம் இல்லாமலும் பட்டாசு ஆலை செயல்பட்டால் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்...
Next Story