பெரியகுளம் தோட்டத்தில் திருடிய 3பேர் கைது

X
பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது தோட்டத்தில் உள்ள மோட்டார் ரூம் தகரம் பிரிக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த 30,000 மதிப்புள்ள புல் வெட்டும் இயந்திரம் திருடப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட ஆதித்யா, ரவீன்குமார், லட்சுமணன் ஆகிய மூன்று பேரை நேற்று (மார்.15) கைது செய்தனர்.
Next Story

