பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல் 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.

X
Paramathi Velur King 24x7 |16 March 2025 7:50 PM ISTபெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பரமத்திவேலூர், மார்ச்.16: பரமத்தி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 28), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்த வர் அஜய். இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று பரமத்தியில் உள்ள டாஸ்மாக் கடையில் சத்தியசீலன் மது 3 அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜய் முன் விரோதத்தை மனதில் வைத்து அஜய், அவரது அண் ணன் பிரசாந்த், அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் சத்திய சீலனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சத்தியசீலனை அங்கிருந்தவர்கள் காப் பாற்றி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த னர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய், பிரசாந்த், கார்த்திக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
