சீட்டு விளையாடிய 3 பேர் கைது

சீட்டு விளையாடிய 3 பேர் கைது
X
காளையார்கோவில் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள புரசரை உடைப்பு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் ரோந்து மேற்கொண்டுள்ளனர். அப்போது கழுகாடி பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் பீட்டர் (50), காயாஓடை பகுதியைச் சேர்ந்த பாண்டி (47), கழுகாடி பகுதியைச் சேர்ந்த சூசைமாணிக்கம் (53) ஆகிய 3 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story