டாக்டருக்கு கொலை மிரட்டல் 3 பேர் கைது

டாக்டருக்கு கொலை மிரட்டல் 3 பேர் கைது
X
நித்திரவிளை
களியக்காவிளை அருகே அன்னிக்கரை பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (42). டாக்டரான இவர் நித்திரவிளை  அருகே உள்ள காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.        நேற்று மதியம் கிழக்கு கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த அபிஜித் (23), சமத்துவபுரத்தை சேர்ந்த விஷ்ணு (24), மாம்பழஞ்சி பகுதியை சேர்ந்த சிவலால் (26) ஆகிய மூன்று பேர் மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.        தொடர்ந்து அங்கு இருந்த டாக்டர் கலைச்செல்வன் மற்றும் செவிலியர்களை பார்த்து தகாத வார்த்தைகள் பேசி கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது சம்பந்தமாக கலைச்செல்வன் நித்திரவிளை போலீசில்  புகார் அளித்தார். போலீசார் வாலிபர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story