சேலம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 3 பேர் கைது

சேலம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 3 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் எருமாபாளையம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், எருமாபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் மனைவி கந்தாயி (வயது 65) என்பவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல், அம்மாப்பேட்டை நஞ்சம்பட்டி ரவுண்டானா பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த டவுன் பாண்டியராஜன் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.900 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி என்.மேட்டு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (25). இவர், கொண்டலாம்பட்டி சந்தை பேட்டை பின்புறமாக சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற கொண்டலாம்பட்டி போலீசார் அவரை பிடித்து விசாரித்து சோதனையிட்டனர். இதில் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றியதுடன், தியாகராஜனையும் கைது செய்தனர்.
Next Story