கார் மோதி சிறுமி உட்பட 3 பேர் காயம்

கார் மோதி சிறுமி உட்பட 3 பேர் காயம்
X
நாகர்கோவில்
நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதி சேர்ந்தவர் டைட்டஸ் (34) நேற்று இரவு இவர் தனது உறவினர் கிறிஸ்டினம்மாள் (58) மற்றும் தனது மனைவியின் அக்காள் மகள் தாரா குளோரி (6) ஆகியோரை  கொண்டு பைக்கில் ஆசாரிபள்ளத்திலிருந்து ராணி தோட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.      அப்போது ஆசாரிப்பள்ளம் பெட்ரோல் பங்க் அருகே வரும்போது பின்னால் அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையாக வந்த கார் இவர்களின் பைக் மீது மோதியது. இதில் டைட்டஸ் உட்பட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.     இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி காரை ஓட்டிவந்த இன்ஜினியர் நாகர்கோவில் பள்ள விளை பகுதி சேர்ந்த தாமஸ் பிரேம்குமார் (56) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். காயமடைந்த தாரா குளோரி  ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story