சேலத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

சேலத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாநகரில் கஞ்சா விற்பவர்களை பிடித்து கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சேலம் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் நாமமலை அடிவாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்த போது அம்மாபேட்டை ராஜகணபதி தெருவை சேர்ந்த சரவணன் மகன் சூர்யா (வயது 20) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.750 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போன்று வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனா முத்துராமன் தலைமையில் போலீசார் கத்தாளப்பாடி ஏரி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த வளையகாரனூரை சேர்ந்த கோவிந்தசாமி மகன் விஜய் (23) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.700 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையில் போலீசார் பெரியகொல்லப்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய மகன் எட்டப்பன் (29) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story