தஞ்சை அருகே கத்தியை காட்டி மிரட்டி சிறுவனிடம் செல்போன் பறிப்பு : 3 பேர் கைது

X

கைது
தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து தானும் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். தஞ்சை அருகே பட்டுக்கோட்டை பைபாஸ் பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்த 3 நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென சிறுவனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செல்போனை பறித்து தப்பி சென்றனர். இது குறித்து, அந்தச் சிறுவன் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிறுவனை மிரட்டி செல்போன் பறித்தது தஞ்சை விளார் ரோடு பாரதிதாசன் நகரை சேர்ந்த நந்தகுமார் (25), முருகன் (37), சுதாகர் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து நந்தகுமார் உள்ளிட்ட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Next Story