சேலத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X
போலீஸ் கமிஷனர் உத்தரவு
சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த மாதம் 9-ந் தேதி அப்பகுதியில் நடந்து சென்றபோது, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 35), வல்லரசு (25), ராஜா (23) ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.14 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசில் ரமேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரைச்செல்வன் உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர்கள் மீது கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் 3 பேரும் தொடர்ந்து வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவதாலும், பொது ஒழுங்கு மற்றும் அமைதியை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனருக்கு கிச்சிப்பாளையம் போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட தாமரைச்செல்வன், வல்லரசு, ராஜா ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.
Next Story