வரதட்சணை கேட்டு பெண் கொடுமை: கணவர் உள்பட நான்கு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

வரதட்சணை கேட்டு பெண் கொடுமை: கணவர் உள்பட நான்கு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
X
வரதட்சணை கேட்டு பெண் கொடுமை: கணவர் உள்பட நான்கு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அரியலூர், ஏப்.6- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வரதட்சணைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவர் உள்பட நான்கு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம், பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் வெற்றிச்செல்வன்(26 ). கடந்த 2022 ஆண்டு இவர், ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிருந்தா என்பவரை காதலித்து, பாலியல் பலத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்துள்ளார். பின்னர் பிருந்தா 7 மாத கர்ப்பிணியான பிறகு இரு வீட்டார் சம்மத்ததுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான பிறகு சென்னை சென்ற வெற்றிச்செல்வன், பிருந்தாவுடன் பேச மறுத்து, குழந்தை பிறந்ததும் கூட பார்க்க வரவில்லை. இதுகுறித்து பிருந்தா கேட்டதற்கு, வெற்றிச்செல்வனும், அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாமல், வெற்றிச்செல்வத்துக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து வெற்றிச்செல்வனை கைது செய்து, அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டி.செல்வம், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய அவரது கணவர் வெற்றிச்செல்வன், மாமனார் காமராஜ்(63), மாமியார் வள்ளி(52), நாத்தனார் ஜெனி(26) ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கில் அரசு தரப்பில் ராஜா ஆஜராகினார். படவிளக்கங்கள்: வெற்றிச்செல்வன், காமராஜ், வள்ளி, ஜெனி.
Next Story