அரக்கோணம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

X

மணல் கடத்திய 3 பேர் கைது
அரக்கோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சங்கர் மற்றும் போலீசார் அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் அரக்கோணம் -சோளிங்கர் ரோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அரக்கோணம் நோக்கி வந்த 3 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் காவேரிபாக்கம் கடப்பேரி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 33). புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் (28), வாலாஜா வன்னிமேடு மோட்டூர் பகுதியை சேர்ந்த சுகுமார் (21) ஆகியோரை கைது செய்தனர்.
Next Story