வாலிபரை அரிவாளால் தாக்கிய 3பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

X
தூத்துக்குடியில் மது போதையில் தகராறு செய்து வாலிபரை அரிவாளால் தாக்கிய 3பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி 3வது மைல் மெயின் ரோடு முதல் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஸ்ரீராம் (23), கூலி வேலை பார்த்து வருகிறார். இரவு அங்குள்ள ஒரு ஹோட்டல் எதிரே நின்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் மது போதையில் தகராறு செய்து ஸ்ரீராமை சரமாரியாக அரிவாளால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து 3 பேர் கும்பலை தேடி வருகிறார்.
Next Story

