தூத்துக்குடி சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு மாற்றம்!

தூத்துக்குடி சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு மாற்றம்!
X
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவார் முத்தமிழ் அரசன். இவர் மீது பல்வேறு புகார்கள் எதிரொலியாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.  பின்னர் மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில் பணி அமர்த்தபட்டார். இதற்கிடையே வழக்கறிஞர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே தென்பாகம் காவல் நிலையத்தில் பணி நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரையன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை அவர் தாக்கியதாகவும், அதனால் அந்த வாலிபருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசனை மீண்டும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
Next Story